Sudha Ravi's Novels

Tamil Novels and Short Stories, Blog and Poems.

About

புத்தகங்கள் என் சுவாசம்.வாசிப்பு ஒன்றையே என் பொழுதுபோக்காக நினைப்பவள்.பதினைந்து வருடங்கள் குடும்ப பொறுப்புகளில் இருந்ததால், என் சுவாசத்தை மறந்திருந்தேன். வெளிநாட்டில் இருந்ததும் அதற்கொரு காரணம்.இணையத்தில் வலம் வர ஆரம்பித்த பிறகு மீண்டும் என் சுவாசம் சீராகியது.விரும்பிய புத்தகங்கள், விரும்பிய எழுத்தாளர்களின் கற்பனைகள் என்னை வந்தடைந்ததில் எனது வாழ்க்கை வண்ணமயமானது.

படித்த புத்தகங்களை விமர்சிக்க ஆரம்பித்து, மெல்ல எழுத்துலகில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்தேன்.எழுத்து என்னை அதனுலகத்தில் உள்ளிழுத்துக் கொண்டது.தவழத் தொடங்கி இருக்கும் என்னை அரவணைத்து தங்களின் கருத்துக்கள் மூலம் மெருகேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

Advertisements