“சம்சாரம் என்பது வீணை!!!”

கணவன், மனைவி இருவருக்குமிடையே புரிதல் அவசியம்…அன்போ, புரிதலோ இல்லாத வாழ்க்கை நரகமே..அதிலும் ஒருவரின் உதாசீனம் ஏற்ப்படுத்தும் வலி வாழ்நாள் முழவதும் உறுத்தலைக் கொண்டு வரும்..

இங்கு விஸ்வா உங்கள் மனம் கவர் கள்வனாக வருபவன். பெண்களின் உணர்வுகளுக்கு மிகுந்த மதிப்பளிப்பவன். மேடை பாடகனான அவனுக்கு இசை மேல் அளவில்லாத காதல். இன்ஜினியரிங் படித்திருந்தாலும் இசையில் இருந்த நாட்டத்தில் வந்த வேலைகளை எல்லாம் உதறிவிட்டு லைட் மியுசிக் ட்ரூப் நடத்தி தனது இசை ஆர்வத்தை பூர்த்தி செய்து கொண்டும், வருமானத்திற்கும் வழி செய்து கொண்டிருப்பவன்…

நாயகி நித்யா..தாயில்லாமல் அக்கா, மாமாவிடம் வளர்ந்து வருபவள். தன்னை சுற்றியுள்ளவர்களின் மனதை உணர்ந்து கொள்ளாமல் எடுத்தெறிந்து பேசும் குணம் உள்ளவள். ஐ.டி துறையில் பணி புரிந்து கொண்டிருப்பவள். தன் காலில் நிற்பதில் தன்னம்பிக்கை வளருவதற்கு பதிலாக திமிருடன் வலம் வருபவள்..

இந்த இருவரும் வாழ்க்கையில் இணையும் போது சம்சாரம் வீணையாகுமா? இல்லை மின்சாரமாகுமா?

இந்த கதையின் அத்தியாயங்கள் ஒவ்வொரு புதன் அன்றும் வரும்… பதிவுகள் அடுத்த புதனில் இருந்து ஆரம்பம்…

Advertisements