போராட்ட பறவையொன்று துயில் கொண்டது!!!

வாழ்க்கையில் எல்லாம் இருந்தும், கிடைத்தும் மனதில் ஆயிரம் குறைகளை சுமந்து கொண்டு திரியும் மனித மனங்களுக்கிடையே, தங்களின் உடல்நல குறைவை பற்றி சிறிதளவேனும் சோர்வுற்றுப் போகாமல் அடுத்தவருக்காக பார்த்த இதயங்களில் ஒன்று தன் துடிப்பை நிறுத்தி ஓய்வெடுக்க சென்று விட்டது.

    வானவன் மாதேவி மஸ்குளர் டிஸ்டராபி என்கிற தசைச் சிதைவு நோய்க்கு ஆளானவர். அவரது தங்கை இயல், இசை வல்லபியும் இதே நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

     இந்நோயினால் தசைகளின் ப்ரோடீன் சிதைவதும், அதன் தொடர்ச்சியாக தசை அணுக்கள், திசுக்கள் உயிரிழப்பதும் நிகழ்கிறது.நமது உடலிலும் திசுக்கள் உயிரிழப்பு நிகழ்ந்தாலும் புதிய திசுக்கள் உருவாகி அவற்றின் இடத்தை நிரப்பி விடும். ஆனால் இவர்களுக்கு புதிய திசுக்கள் உருவாகுவதில்லை. இந்நோயை குணப்படுத்த சிக்கிச்சை கிடையாது. கட்டுப்படுத்துவது மட்டுமே சாத்தியம்.

           இவர்களால் சாதரணமாக நடக்க முடியாது. யாரவது தூக்கி தான் உட்கார வைக்கவே முடியும். தூக்குவதிலும் கூட கவனம் வேண்டும். அதே சமயம் படுக்கையிலேயும் தொடர்ந்து இருந்து விட முடியாது. இதை தவிர பெண்களுக்கு உண்டான சிரமங்கள் என்று இவர்களின் பிரச்சனைகள் நம்மை கண்ணீர் சிந்த வைக்கின்றது.

           முதலில் இந்நோய் வானவன் மாதேவியை தாக்கியிருக்கிறது. அவருக்கு ஏற்பட்ட சிக்கல்களை புரிந்து கொள்ள தொடங்கும் போது இயல், இசை வல்லபியையும் தாக்கியிருக்கிறது.

      இம்மாதிரியான ஒரு நோய் தாக்கும் போது அந்த நோயாளி மனம் கலங்கி, சோர்வுற்று, அழுது துடித்து தனக்குள்ளேயே ஒடுங்கிப் போவதுண்டு. ஆனால் இச்சகோதரிகள் இதற்கு விதிவிலக்கு.

        ஆதவ் டிரஸ்ட் என்கிற அறக்கட்டளையை நிறுவி தங்களைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். சென்னை வெள்ளத்தின் போது முகநூல் வழியாக அனைவருக்கும் தகவல் தந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்திருக்கின்றனர்.

          எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்காக யோசிக்க முடியும், செயல்பட முடியும் என்பதை செய்து காட்டியவர்கள்.

வானவன் மாதேவியின் இதயம் தனது துடிப்பை  நிறுத்திக் கொண்டது.போராட்ட பறவையொன்று துயில் கொள்ள சென்று விட்டது.

    

             அன்பை மட்டுமே சுவாசிப்போம்!!!

             அன்பை மட்டுமே விதைப்போம்!!!

Advertisements