என்னடா இது புது மாதிரியான தலைப்பா இருக்கேன்னு பார்க்குறீங்களா ? …. மனிதனுக்கு மட்டும் சொந்தமானதல்ல காதல் என்ற உணர்வு. மிருகங்களுக்கும் வரும் என்பதை என் செல்வங்களின் காதலை அறிந்த போது உணர்ந்தேன்.

   என் வளர்ப்பு செல்வங்கள் budgie என்ற வகை பறவை இனத்தை சேர்ந்தது.அவற்றின் காதல் கதையை படித்து விட்டு நீங்களும் அறிந்து கொள்ளலாம் மிருகங்களுக்கும் காதல் என்ற உணர்வு வரும் என்பதை..

இவங்க தாங்க நம்ம ஹீரோ, ஹீரோயின் நீலவண்ண கண்ணன் தாங்க நம்ம ஹீரோ அவர் பெயர் ஜாக். மஞ்சளழகி தாங்க நம்ம ஹீரோயின் chubby.

  நம்ம ஹீரோ இருக்காரே உண்மையாவே அவர் கண்ணன் தாங்க ஹீரோயினை சந்திக்கும் வரை இவருக்கு ஏகப்பட்ட கோபிக்கைகளுடனே இருப்பார்..அது என்னவோ தெரியலைங்க இவரை கண்டாலே இவர் அழகில் மயங்கி பெண்கள் எல்லாம்  இவரிடம் விரும்பி பழகுவாங்க.

அடுத்து நாம பார்க்க போறது TINKEN இவருக்கு நம்ம ஹீரோ மேல ரொம்ப பொறாமை எப்படிடா வர பிகர் எல்லாம் ஹீரோவை பார்த்தே மயங்குதேன்னு .இவருக்கு எப்போதும் கூண்டுக்குள்ள இருக்கவே பிடிக்காது வெளில தான் சுத்திட்டு இருப்பார் பசி வரும்போது மட்டும் எங்களிடம் வந்து லேசா தலையை தட்டிட்டு போவார் கூண்டுக்குள்ள போகணும்ன்னு சொல்லி மத்த நேரம் எல்லாம் வெளியே தான்.

ஜாக்கிற்கு முதலில் ஒரு ஹீரோயினை கொண்டு வந்தோங்க அவங்க பெயர் பேபி ரொம்ப அழகுன்னு சொல்ல முடியாது ஆனா முசுட்டு குணம்  எல்லாவற்றிலும் ஒரு தீவிரமா இருப்பாங்க. டெலிவரி அப்ப முடியாமல் இறந்து போய்டாங்க….ஆனா அதுக்காகவெல்லாம் நம்ம ஹீரோ அலட்டிக்கல அவர் பாட்டுக்கு வந்தாள் சென்றாள்ன்னு இருந்தார்…

சரி ஹீரோ தனியா இருக்காரேன்னு போய் மஞ்சளழகிய அழச்சிட்டு வந்தோம் அவங்க பார்க்கவே சும்மா கும்முன்னு இருப்பாங்க . குழந்தைத்தனமான அழகோட திரு திருன்னு முழிச்சிட்டு எல்லோர்கிட்டயும் அன்பா இருந்தாங்க….

TINKEN என்ன பண்ணினார் ஆஹா இது நாள் வரை வந்த ஹீரோயின் எல்லோரையும் கோட்டை விட்டுடோம் இனி அப்படி இருக்க கூடாது இப்பவே அவளை உஷார் பண்ணிடலாம்ன்னு செயலில் இறங்கினார் .

CHUBBY முன்னாடி போய் தன் சிறகுகளை விரித்து என்னை பார் என் அழகை பார்ன்னு பூனை நடந்தார் அப்புறம் தன் பெரிய மூக்கை வைத்து அங்கிருந்த பொருட்களை எல்லாம் தீட்டி காண்பித்தார்.

 

“ என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்து விட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன்”

அப்படின்னு பாடினாரு.

 

அதை பார்த்த CHUBBY கடுப்பாகிட்டா அவ தான் வந்தவுடனே ஜாக்கின் அழகில் மயங்கிட்டாளே.

         “போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு

         பல கிறுக்கு உனக்கு இருக்கு இப்போ எண்ணாத

          மன கணக்கு “

அப்படின்னு பாடி நங்குன்னு மண்டைல ஒன்னு போட்டு இனி என் பக்கம் திரும்பாதேன்னுட்டா…….அதுக்கப்புறம் அவ பக்கம் திரும்புறதுக்கு எனக்கென்ன பைத்தியமான்னு நமக்குன்னு ஒன்னு இருக்கே நீ வாடி செல்லம்ன்னு அவ கூட வாழ்க்கையை சந்தோஷமா வாழ ஆரம்பிச்சிட்டார் நம்ம TINKEN.

 

JACK, CHUBBY வாழ்க்கையும் கொஞ்ச நாள் சந்தோஷமா போயிட்டு இருந்துது. ரெண்டு பெரும் மனமொத்த தம்பதிகளா இருந்தாங்க……அப்போ தாங்க CHUBBYயின் உடல்நிலைல மாற்றம் வந்தது உடம்பு சீர்கெட ஆரம்பிச்சுது ஹன்சிகா மாதிரி இருந்தவ கொஞ்சம் கொஞ்சமா தனுஷ் மாதிரி ஆக ஆரம்பிச்சா.

 அப்பவும் ஜாக் அவளை அவன் கையனைப்பிலேயே தான் வச்சுப்பான் .எங்களுக்கு அதை பார்த்து அவ கஷ்டபடுவதை போல உணர்ந்தோம் அதனால ரெண்டு பேரையும் அவளுக்கு உடல்நிலை சரியாகும் வரை  பிரித்து  வைப்போம்ன்னு நினைச்சு பிரிச்சு வெவ்வேறு அறையில் வச்சிட்டோம்.

         ஜாக் அவ தன்னோட இல்லேன்னவுடனே தவிக்க ஆரம்பிச்சான் . அவளும் எப்பவும் அவனை கூப்பிட ஆரம்பிச்சா. சரி கொஞ்ச நாள் ஆனா சரி ஆகிடும்ன்னு விட்டுடோம். ஒரு நாள் வீட்டில் யாரும் இல்ல நானும் வெளில போயிட்டு வந்து CHUBBY வச்சிருந்த கூண்டை போய் பார்த்தேன் அவளை அதில் காணும்.

      எனக்கு பெரிய அதிர்ச்சியா இருந்தது என்னடா இது இறந்து போய் இருந்தால் கூட உடல் அதில் கிடக்கணும் என்னன்னு தெரியலையே அப்படின்னு சொல்லி வீடெல்லாம் தேட ஆரம்பிச்சென். கூண்டு மூடி தான் இருக்கு எப்படி வெளில போக முடியும்ன்னு யோசனையா இருந்தது.

       அந்த அறைல ஒரு இடத்தில் என் பெண் புத்தககங்கள் எல்லாம் அடுக்கி வச்சிருந்தா அங்கே எதோ அசைவு தெரிந்த மாதிரி இருந்தது போய் பார்த்தா மேடம் என் கண்ணில் படாம ஒளிஞ்சு இருக்காங்க. என்னை பார்த்ததும் தன்னை இன்னும் முழுசா மறைக்கிற முயற்சில இறங்குறாங்க.

          அவ எப்படி கூண்டை விட்டு வெளில வந்து உடல் இருக்கான்னா மெலிஞ்சு போனதால கம்பிகளுக்கு இடையே இருந்த இடை வெளில வந்து இருக்கா அதுவும் ஜாக் விடாமல் தான் இருக்கும் இடத்தை வெளிபடுத்திட்டே இருந்ததால…………

         சரி மறுபடியும் அவங்கள பிடிச்சு கூண்டுக்குள்ள போடலாம்ன்னு பார்த்தா எஸ்கேப்ன்னு சொல்லிட்டு என் கையில் அகப்படாம ஓடுறாங்க பாருங்க என்னா வேகம்..

    இதுல ஜாக் குரல் கொடுக்கிறார் …..

         “ நீ எங்கே என் அன்பே மீண்டும்  மீண்டும் நீ

         தான் இங்கு வேண்டும் உந்தன் அன்பு இல்லாது

          எந்தன் ஜீவன் நில்லாது நீ எங்கே “

 

இதுக்கு CHUBBY பதில் கொடுக்கிறாங்க ..

        “ மாமோய் நான் இங்கே இருக்கேன்னு “

இப்படி ஓடி ஓடி கடைசியா அவங்க போய் நின்ன இடம் ஜாக் இருந்த இடம் ….இதற்ககு மேல் இவங்க ரெண்டு பேரையும்  பிரிச்சு வச்சாஅந்த   பாவம் நம்மை  எத்தனை ஜென்மம் எடுத்தாலும் விடாதுன்னு ஜாக் இருந்த கூண்டுக்குலேயே அவளையும் விட்டுட்டேன்.

     அவளை பார்த்ததும் ஓடி போய் கட்டி அணைத்து தன் தோள் வளைவில் வச்சு கிட்டான்……ஆனால் அன்று இரவே அவள் உயிர் கொஞ்சம் கொஞ்சமா பிரிய ஆரம்பிச்சுது அவளின் கடைசி நிமிடம் வரை அவளை விட்டு அவன் அகலவும் இல்லை தன் தோளில் இருந்து விலக்கவும் இல்லை .

        அதன் பிறகு சரியாக பதினைந்து நாட்களில் உண்ணாவிரதமிருந்து தன் உயிரை விட்டான்.அவள் இறந்து ஒரு வாரம் வரை அவளை கூப்பிட்டு கொண்டே இருந்தான்.

         இன்னமும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அழைப்பது போன்று எங்கள் மனதில் தோன்றி கொண்டே இருக்கிறது.எங்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கும் காதல் ஜோடிகள்.

     

Advertisements