💕💕 அலைபாயும் நெஞ்சங்கள் 💕💕 by சுதா ரவி

இவர் படைப்புகளில் நான் வாசித்த முதல் கதை…
எளிமையான எழுத்துநடையில் தான் சொல்ல வந்த கருத்தை நச்சென்று சொல்லியிருக்கிறார் தோழி சுதா. எந்த வித தொய்வும் இல்லாமல் மடமடவென கதையை நகர்த்திய விதம் எனக்குப் பிடித்தது. கவிதைகள் வர்ணனைகள் என்று ரசிப்பவள் நான். இக்கதையில் சிடுவேஷன் சாங்ஸ் உண்டு. வர்ணனைகள் மிகக் குறைவு. ஆனால், அதுவே கவர்வதாக இருந்தது ஒரு ப்ளஸ்.😀😀

எழுத்தாளராக நான் கற்றுக்கொள்ள இக்கதையில் இரண்டு விசயங்கள் பட்டது. ஒன்று, கதையின் sequences விரைவாக செல்ல வேண்டும். மற்றொன்று ஒரு கனமான கதைக்கரு கொண்டு எழுதினாலும் அதையும் ஹாஸ்யத்தை ஆங்காங்கே கொணர்ந்து மனதை லேசாக்கி தந்தால் வாசகர்களை கவரும் என்பது. 👌🏼👍🏼

காயத்திரி , மதி, சரண்யா மற்றும் சாம்பு செம கலக்கல்! 😂😂😂கடைசி நான்கு அத்தியாயங்கள் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

அகல்யா – ஆகாஷ் மற்றும் ஆர்த்தி – நீரஜ் ஜோடிகளின் பங்களிப்பு கதைக்கு மெருகூட்டுவதாய்! ❤️😊

ஸ்ருதி – நிகில் ❤️❤️

ஸ்ருதி மா உன் பொருமைக்கு 💐💐💐 இதோ பூங்கொத்துகள் 💐💐💐… ஆம் சுதாவின் பேனாவும் நிகிலும் படுத்தியபாட்டிற்கு ஒரு பூங்கொத்து போதாது. உன் மன உறுதி சூப்பர்! ❤️அவ்வளவையும் தாங்கி நின்று இந்த நிகில் அலைஸ் எம் ஸ்கொயர் மேல் அப்படியும் காதலா.. பென் டிரைவ் ஐடியா நைஸ். 👍🏼. கடைசியில் நிகிலின் மேல் இருந்த தவறான குற்றச்சாட்டை களைந்து குடும்பத்தினர் அனைவரையும் தலைநிமிர்ந்து நிற்க வைத்தது சூப்பர்!! 👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻

நிகில் முதலில் உன்னை நாங்களெல்லாம் ரொம்பவே திட்டினோம். ஆனாலும், நீ சளைக்காமல் Rj துபாய் நிகிலா ரீஎன்ட்ரி கொடுத்து, பதட்டமில்லாமல் கூலாக சுடச்சுட ஹல்வாவோடு மதியின் வயித்தெறிச்சலையும் கொட்டிகிட்டு ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்டுட்டு வந்த பாரு.. செமடா! ஸ்ருதி என்ன சொல்வாளோன்னு அப்புறம் பீலிங்ஸ் ஆனது வேற.. 👌🏼❤️

நந்தனா – ராஜ் … ச்சீ ச்சீ!! சுயநலத்தில் இப்படியும் உண்டா? 😡😡😡😡😡😡
நந்தனா அம்மா 🙏🏻🙏🏻 அருமை!

ஆழமான கருத்தை அழகான கதை வடிவில் தந்த சுதாவிற்கு நன்றி!

அன்புடன்,
ஆர்த்தி ரவி

Advertisements