அலைபாயும் நெஞ்சங்கள் – சுதா ரவி

அன்பை மட்டுமே அனுபவித்த ஒரு நெஞ்சம் ,அன்பையே அனுபவிக்காத ஒரு நெஞ்சம் ,இந்த இரண்டு நெஞ்சங்களுக்கு இடையே ஏற்படும் காதல்,வலி ,பிரிவு ,ஊடல் என அனைத்தையும் ரவுண்டு கட்டி அருமையாக “அலைபாயும் நெஞ்சங்கள் என்னும் தலைப்பில் கொடுத்து இருக்கிறார் நமது தோழி சுதாரவி “….

பொதுவாக ஆண்கள் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் அவமானங்கள்
ஈஸியா வெளியில் வந்துடும் ,ஆனால் பெண்ணால் ஆணுக்கு ஏற்படும் அவமானம் வெளியில் தெரிவதில்லை,.அப்படி ஒரு நிகழ்ச்சி கதையின் நாயகன் நிகிலுக்கு ஏற்ப்படுகிறது …அப்படி என்ன நடந்தது …?”

“ஒரு உயிரை ஆழமாக
நேசிக்க ஆரம்பிக்கும்
போதே வலிகளையும்
சேர்த்து நேசிக்கக் கற்றுக்
கொண்டால் வலிகளும்
சுகமாகும்..!!இப்படி ஏங்கும் அளவுக்கு நாயகி ஸ்ருதிக்கு நடந்தது என்ன …?

ஒருத்தரின் துரோகத்திற்கு தண்டனை மற்றவருக்கு கொடுப்பது நியாயமா …?? என்று கதை படித்த அனைவரும் பொங்கி பொங்கல் வைத்த சம்பவமும் நடந்தது ….. இவங்களோட முந்துன கதை RJ வைக்கூட மக்கள் இப்படி திட்டலைப்பா ..ஆன நிகிலை திட்டாத ஆட்களே இல்லை ..அப்படி இவன் செய்த செயல் என்ன …???

இதில் வரும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அருமையான மக்கள் ,இதில் காயத்திரி என்னும் ஒருவர் வருவார் ,அவர் செய்யும் செயல்கள் நான் சொல்லலை ,நீங்களே படிச்சு பாருங்க ….அப்புறம் மதின்னு ஒருத்தர் ஹனிமூன்னு போவர் அங்கு அவருக்கு நடந்தது ஹனிமூன்னா இல்லை சனிமூன்னா ….????

எதார்த்தமான ,இயல்பான நிகழ்வுகள் குடும்ப பின்னணிகள் என்று அனைத்தையும் நம் கண் முன்னால் கொண்டு வருகிறார் நமது எழுத்தாளர் …

மக்களே …நான் சுதாக்கா கிட்ட நானும் உங்களோடு துபாய்க்கும்,வேம்பநாட்டுக்கும் டூர் வரேன்னு சொன்னேன் , இந்த இடத்தை எல்லாம் என்னை செலவே செய்ய விடாம ப்ரீயாவே தன் எழுத்தின் வழியாக சுத்தி காட்டிட்டாங்க …,நீங்களும் போய் என்ஜாய் பண்ணுங்க ….

கதை முடிய இன்னும் ஒரு அத்தியாயம் மட்டுமே உள்ளது …படிக்காதவங்க படிக்க ஆரம்பிங்க ….மிஸ் பண்ணிட்டு வருத்தபடாதிங்க நட்புகளே ….. கதையை படிக்க …..

Advertisements