அலை பாயும் நெஞ்சங்கள் ……..

நம்பிக்கை ….. “கட்டியவள்[ன்] கடைசிவரை கைவிடமாட்டாள்[ன்]……..”, என்ற இந்த நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது தானே ‘திருமணம்’……. அந்த ‘நம்பிக்கை’….. பொய்த்து போனால்………தன்னை நம்பியவர்களையும் தண்டிக்க தோன்றுமோ….??? இங்கு பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர்…….. பிறரின் தப்புக்கு, ‘தன்னவளுக்கு’ தண்டனை கொடுக்க……. மற்றொருவர் ‘தன்னவனுக்கு’, தன்னையே …… கொடுப்பது …. எப்படி சாத்தியம்!!!!! “உள்ளத்தில் அன்பிருந்தால் …… அனைத்தும் சாத்தியம் தான் போல…….”

ஆரம்பத்துல…….,‘ஹீரோ’ ன்னு சொல்லிக்கற அளவுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாம ! அறிமுகமாகுற இந்த நி[ப]க்கிபய …… ஸ்ருதிகிட்ட பண்ற அநியாயம் இருக்கே…. அதை சொல்லி மாளாது போங்க ! “அப்படியே….. அந்த எட்டாவது மாடியில இருந்து தள்ளிவிட்டிருக்கலாமே… இந்த பொண்ணு”,ன்னு அடிக்கடி என்னை நினைக்க வச்சவன் இந்த ப[நி]க்கி ! அப்புறம் தான் இந்த புள்ளயோட நினைவு மீட்பு [ அதாங்க flashback ] தெரியவந்தது ! ஐயோ……பாவம்…. இந்த அளவுக்கா இந்த பக்கிபுள்ள அசிங்கபட்டிருக்குன்னு கஷ்டமா போச்சு.. வெளிய சொல்லமுடியாத சிலவிஷயங்களை மனசுக்குள்ள போட்டுக்கிட்டு அது பட்ட வேதனையிருக்கே……. நம்ம எதிரிக்கு கூட இந்த நிலைமை வரகூடாதுடா சாமி ……

வாழ்க்கையில இதுவரைக்கும் அடியே….. வாங்காம ,ஆடிகார்லயே…… சுத்திட்டு இருந்தவனுக்கு,மொத… அடி, அதுவும்…. மரண அடி, விழவே…. என்ன பண்ணறதுன்னு தெரியாம தப்பு பண்ணிட்டான், போனா போகுது, பொழச்சி போகட்டும்ன்னு”, அவனுக்கு மன்னிப்பையும், அவனை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரியவச்சி, ஒரு சின்ன உறுத்தல் கூட இல்லாத நிம்மதியான வாழ்க்கையையும் தந்தா…. பாருங்க…. இந்த ஸ்ருதி பொண்ணு , அங்க தான் அவ நிக்குறா !

என்ன தான் நாம நரகவேதனை பட்டாலும்…… நம்மல போலவே…. அப்பாவியாயிருக்கிற இன்னொருத்தருக்கு அதை அப்படியே…, திருப்பி கொடுக்கறது நல்லாவா இருக்கு …??? என்னது ……???. மறுபடியுமா …..!!! இப்போ தான் அவன் திருந்திட்டானே …… இன்னும் என்னத்துக்கு அவனை தாளிக்கறதுன்னு மூளை சொன்னாலும், மனசு கேட்காம …… அவனை திட்றதே பொழப்பா போச்சு எனக்கு ! இனி….. இதுக்குமேல இந்த நி[ப]க்கிய பத்தி நான் நொய்யி…நொய்யின்னு, ஏதாவது சொன்னா…. அவன் ஒதைக்கிறானோ இல்லையோ….., ஸ்ருதி கண்டிப்பா ஒதைப்பா ! இதுக்கு தான் பெரியவங்க, “ புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ள மூக்கை நுழைக்க கூடாது,அவங்க இன்னைக்கு அடிச்சிகிட்டு,நாளைக்கு சேர்ந்துக்குவாங்க”ன்னு, சொன்னாங்க போல !!!! “சரி… சரி….. நான் இதோட குறை கூறும் வேலைய நிப்பாட்டிகறேன்…..

ம்ம்ம்ம்ம்ம் …… காயத்ரிம்மா போல மாமியார் நிஜத்துல எங்க கிடைக்கிறாங்க…… இதெல்லாம் …… கதையில தான் கிடைப்பாங்க! நிஜத்துல நிஜம்ம்ம்மா…… கிடைக்கவே…… மாட்டாங்கன்னு நம்மல நாமலே ….. தேத்திக்கவேண்டியது தான்……. . .இது எல்லாத்தையும் விட தப்பு செஞ்சவளுக்கு, அவ அம்மாவே கொடுப்பாங்க பாருங்க ஒரு தண்டனை …… அது தான் இங்க சூப்பர்…… மக்களே ……’ஒரு சாப்பாட்டுராமன் ….. காதல்மன்னனாக மாறிய கதை….’ முடிஞ்சிடுச்சி ….. எல்லோரும் சீக்கிரம் படியுங்க ……”

Advertisements