காதலர் தினத்தில் ஒரு கணவனின் புலம்பல்!!!

அந்த காலத்துல புருஷனுங்க தான் பொற்காலத்துல இருந்து இருக்கானுங்க…..கல்யாண நாளு மறந்தாலும் குத்தமில்லை,பாதி பேருக்கு பொண்டாட்டி பிறந்த நாளே தெரியாது. ஆனாலும் சந்தோஷமா இருந்தானுங்க…ஆனா நம்ம நிலைமை???

கல்யாணத்தை பண்ணினோமா காலத்துக்கும் லைப் டைம் வாரண்டி மாதிரி நம்மளையே சுத்தி சுத்தி வரும். பொறந்த வீட்டுக்கு போனாலும் நாளே நாளுல பத்தி விட்ருவாங்க.வெளில என்ன அலம்பல் பண்ணினாலும் வீட்டில ராஜ மரியாதை கிடைக்கும்.

 இப்போ உள்ள கணவன்களின் நிலைமை, காப்பி சூடா இல்லைம்மா அப்படினா போதும், எந்திரிச்சு போய் சூடு பண்ணிக்கோன்னு சொல்லுது. இதுல கல்யாண நாளுக்கு gift, பொறந்த நாளுக்கு gift கடன்காரனுக்கு வட்டி கட்டுற மாதிரி கட்டித் தொலைக்கணும். இல்லேன்னா ஒரு மாசத்துக்கு சாப்பிடுற item எல்லாம் தட்டுல விழாம நம்ம மூஞ்சிக்கு தான் பறந்து வரும்.

அந்த காலத்துல பக்கத்து வீட்டுல இருக்கிறவங்க மட்டும் தான் எதையாவது சொல்லி உசுப்பேத்தி விடுவாங்க. இப்போ இந்த முகநூலில் எங்க வீட்டுகாரர் காதலர் தினத்துக்கு ஆசையா ஒரு செயின் வாங்கிட்டு வந்தார்னு சொல்லி ஒரு போட்டோவை போட்டு விடும். அவரு ஆசையா வாங்கிட்டு வந்தாரா தலையெழுத்தேன்னு வாங்கிட்டு வாந்தாரான்னு அவரை கேட்டாத் தான்  தெரியும்.

அதை பார்த்ததும் நம்ம வீட்டில் இருக்கிறது கிளம்பிடும். ஊர்ல உள்ளவன் எல்லாம் பொண்டாட்டிக்கு ஆசையா gift வாங்கி கொடுத்து தன்னோட காதலை சொல்றானுங்க. எனக்குன்னு வந்து வாச்சு இருக்கேன்னு சொல்லி அதுக்கும் நாலு மொத்து.வாங்கி கொடுத்தாலும் ஒரு gift ஒழுங்கா வாங்க துப்பில்லைன்னு அதுக்கும் நாலு  விழும். இதுல பேப்பரை திறந்தா காதலர் தினத்துக்கு பரிசு வாங்கி கொடுக்காததால மண்டையை பிளந்த மனைவின்னு நியூஸ் வருது……இந்த காலத்து கணவனுங்க தாண்டா எவ்வளவோ வீர சாகசம் எல்லாம் பண்ணி தங்களோட காதலை நிரூபிக்க வேண்டி இருக்கு…..poor boys…………..

Advertisements